‘தந்தி டி.வி.’யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அபூர்வ தகவல்கள்

251 0

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய நிகழ்ச்சி ‘தந்தி டி.வி.’யில் ஒளிபரப்பாகிறது.

‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் உறவினர்கள், நெருங்கி பழகிய நண்பர்கள் அவரை பற்றிய அரிய தகவல்களை மனம் திறந்து சொல்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதி நேற்று இரவு ஒளிபரப்பானது. ஜெயலலிதாவை பற்றிய பல அபூர்வ தகவல்கள் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெற்றது.
இந்த நிகழ்ச்சி வருகிற வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 5 நாட்கள் ஒளிபரப்பாகிறது.
2-வது நாளான இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் அன்றாட வாழ்வில் நடைபெற்ற சுவாரசியங்கள், நவராத்திரி, தீபாவளி என போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் கொண்டாடி மகிழ்ந்த பண்டிகை நாட்கள் உள்ளிட்ட அவரது வாழ்வின் இனிமையான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
அப்பலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்ததும் ஜெயலலிதா முதன் முதலில் பேசிய வார்த்தை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதியில் அவர் உருகி அழுத தருணங்கள், வீட்டில் வந்த பாம்பை கண்டு காவலர்கள் நடுங்கிய போதிலும் அவர் அஞ்சாமல் நின்ற அதிசயம், ஜெயலலிதாவின் மிமிக்ரி ஆற்றல், கருணாநிதி குரலில் ஜெய லலிதா பேசி காட்டிய சுவையான தருணம், குரங்குகள், நாய்க் குட்டிகள் என பிராணிகள் மீது அவர் செலுத்திய பாசம், செல்ல நாய்க்குட்டியின் மறைவால் அவர் ரத்து செய்த டெல்லி நிகழ்ச்சி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுத்த மதிய விருந்தில் நடந்த சுவாரசியங்கள், இரவில் அவர் விரும்பி கேட்ட இனிப்பு, அவரது விருப்ப உணவு வகைகள் என்று பல அபூர்வமான தகவல்கள் இன்று இரவு ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும்.

Leave a comment