அர்ஜென்டினாவில் பிரதமர் மோடியை கேலியாக சித்தரித்த டி.வி. சேனல் – சமூக வலைத்தள ஆர்வலர்கள் கண்டனம்

4571 0

அர்ஜென்டினாவில், பிரதமர் மோடியை கேலியாக சித்தரித்த டி.வி. சேனலுக்கு சமூக வலைத்தள ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் சென்றிருந்தார். அவர் அங்கு போய்ச் சேர்ந்ததும், அது குறித்த செய்தியை அங்குள்ள குரோனிகா என்ற டி.வி. செய்தி சேனல் கிண்டலாக வெளியிட்டது.

அதாவது, ‘அபு வந்து சேர்ந்தார்’ என்ற தலைப்புடன் மோடியின் அர்ஜென்டினா வருகையை அந்த டி.வி. சேனல் காமெடி செய்தியாக்கியது. அத்துடன் அந்த அபு கதாபாத்திரத்தையும் காட்டியது.

அங்கு டி.வி.யில் ஒளிபரப்பாகிற ‘தி சிம்ப்சன்ஸ்’ என்ற பிரபலமான காமெடி தொடரில் இடம்பெற்றுள்ள கேலிக்குரிய இந்திய கடைக்காரர் கதாபாத்திரம்தான் அபு ஆகும்.

இப்படி கேலிக்குரிய இந்திய கடைக்காரர் கதாபாத்திரமாக பிரதமர் மோடியை அந்த டி.வி. சேனல் சித்தரித்தது, சமூக வலைத்தள ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்தது. அவர்கள் அந்த டி.வி. சேனலுக்கு கண்டனம் தெரிவித்து வறுத்தெடுத்து விட்டனர்.

Leave a comment