ஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு

374 0

201609271056423976_snake-wrapped-around-armrest-halts-japanese-bullet-train_secvpfஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் பயணிகள் கூட்டத்தில் திடீரென புகுந்த பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது.ஜப்பானில் புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜப்பானில் அதிவேக புல்லட்ரெயில் ஷின்கன்சனில் இருந்து ஹிரோஷிமாவுக்கு பறப்பட்டு சென்றது. இது எங்கும் நிற்காமல் தொடர்ந்து அதிக வேகத்தில் செல்லக் கூடியது. இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரெயில் புறப்பட்டதும் ஒரு பயணியின் கைபிடியில் ஒரு பாம்பு சுற்றிய நிலையில் இருந்தது.

அதை அவர் பார்க்கவில்லை. சுமார் 50 நிமிடத்துக்கு பிறகு தான் பாம்பு இருப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பயத்தில் அலறினார்.இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து நடத்துனர் வரவழைக்கப்பட்டார். அவரும் அந்த பாம்பை பார்த்தார் இதற்கிடையே ரெயில் ‌ஷமமாஸ்து நிலையத்தை வந்தடைந்தது.

வழக்கமாக அங்கு புல்லட் ரெயில் நிறுத்தப்படுவதில்லை. ஆனால் உள்ளே நுழைந்த பாம்பை பிடித்து வெளியேற்ற அங்கு புல்லட் ரெயில் நிறுத்தப்பட்டது.

உடனே ரெயில்வே போலீசார் பிடித்து அந்த பாம்பை ஒரு நிமிடத்தில் வெளியேற்றினார். அதன் பிறகு பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதை தொடர்ந்து ரெயில் புறப்பட்டு சென்றது.

ரெயிலுக்குள் நுழைந்த பாம்பு வி‌ஷத்தன்மையற்றது. அந்த பாம்பு யாரையும் கடிக்கவில்லை. இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என புல்லட் ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.