குஜராத்தில் பெட்ரோலிய நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
குஜராத்தின் வதோதரா நகருக்கு அருகே உள்ள நந்தசாரி என்ற பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று தொழிலாளர்கள் பலர் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது இந்த நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 2 தொழிலாளர்கள் என 3 ஒப்பந்த ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் அவர்கள் உடல் கருகி பலியானார்கள். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

