த.மா.கா. வேட்பாளர்கள் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும்

351 0

201609271100459250_gk-vasan-says-tmc-candidate-list-released-in-two-days_secvpfஉள்ளாட்சி தேர்தலுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இந்த நிலையில் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற்று இருந்ததோ அந்த கட்சிகளுடன் கூட்டணி தொடருகிறது என மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பாமர மக்களும் தமிழை எளிதில் கற்று கொள்ளும் வகையில் எளிய தமிழால் தினத்தந்தி நாளிதழை தொடங்கி தமிழுக்கு பெருமை சேர்த்தவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் பட்டியல் இன்னும் 2 நாளில் வெளியிடப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற வகையில் அனைத்து கட்சிகளுக்கும் கால அவகாசம் தராமல் ஆளுங்கட்சியினர் அவர்களுக்கு சாதகமாக அவசர அவசரமாக தேர்தல் தேதியை வெளியிட்டு இருக்கிறார்கள்.

கூட்டணி தொடர்பாக தி.மு.க.வின் நிலைப்பாட்டை மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.