எலும்புக் கூடுகளை கடத்தியவர் கைது:பீகாரில் சம்பவம்

470 0

இந்தியாவின்  பீகார் மாநிலத்தில் எலும்புக்கூடுகளை ரயிலில் கடத்த முயன்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுவாக தற்போது ரயில் மூலமாக நடக்கும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது.முக்கியமாக வட இந்தியாவில் ரயிலை பயன்படுத்தி அதிக அளவில் போதை பொருள் கடத்தப்படுகின்றது.

ஆனால் ரயிலில் எலும்புக்கூடுகளை கடத்திய சம்பவம் இப்போதுதான் முதல்முறை அரங்கேறி உள்ள நிலையில் எலும்புகூடுகளை எடுத்து சென்ற நபரையும் பொலிஸார் கைது கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூட்டைகளாக எழும்புக்கூடுகளை கட்டி எடுத்து வந்துள்ளார்.

இந்த மூட்டைகள் முழுக்க எலும்புக்கூடுகள் இருந்துள்ளது,இதை வெளியே தெரியாதது போல் கட்டி எடுத்து வந்துள்ளார்.

மொத்தம் 34 எலும்புக்கூடுகள், 16 மண்டை ஓடுகள் காணப்பட்டுள்ளதுடன் பூட்டானில் பயன்படுத்தும் பூட்டான் ரூபாயும் இருந்துள்ளது.

சில வெளிநாட்டு ஏ.டி.எம் அட்டைகள், மற்றும் ஒரு வெளிநாட்டு சிம் கார்ட் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரினால் குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பெயரில் அவரை சோதனை செய்த பொலிஸார் உடனே அவரை கைது செய்தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட மூட்டையை அவர் உத்தர பிரதேசத்தின் பாலியா என்ற பகுதியில் இருந்து எடுத்து வந்துள்ளார்.

பூட்டான் சென்றுவிட்டு, பின் அங்கிருந்து மீண்டும் மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பாய்குரியில் சில சாமியார்களிடம் இதை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இறுதியில் பொலிஸாரின்  விசாரணையின் பின்  இரகசிய பூஜைக்காக எழும்புக்கூடுகளை எடுத்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பூஜை விவரங்கள் எதுவும் வெளியில் சொல்ல வில்லை என  தெரிவித்த பொலிஸார்  தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment