அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

31 0

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தெய்வங்களின் பெற்றோர்களாலும்,உறவினர்களாலும்உணர்ச்சிப் பெருக்கோடு நினைவேந்தல்கள் நடைபெற்று வருகின்றன.

அம்பாறைமாவீரர் துயிலுமில்ல ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் குட்டிமணி மாஸ்டர் எனப்படும் நாகமணி கிருஷ்ணபிள்ளையின் தலைமையில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுருகின்றன.

மாவீரர்களின்பெற்றோர்கள் மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்திய காட்சிகள் அனைவரதுமனதினையும் கனக்கச்செய்தது.

கஞ்சிகுடிச்சாறுமாவீரர் துயிலுமில்லத்தின் ஈக சுடரினை மூன்று மாவீரர்களை தேசியவிடுதலைக்கு கொடையளித்த கனகசுந்தரம் தில்லையம்மா என்ற தாய் ஏற்றிவைத்தார்.

இதன்பின்புஅனைத்து மாவீரர்களின் பெற்றோரும் உறவினர்களும் தீபங்களை ஏற்றியபின்னர். மாவீரர்தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

வானவர்கள்மாவீரர்களை நினைவு கூர்ந்து கண்ணீர் சொரிவதனை போன்றுஇயற்கையும் மழைதூவி தாயக விடுதலைக்கு ஆகுதியாக்கிய தேசிய செல்வங்களின் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

எண்ணூற்றுக்குமேற்பட்ட வித்துடல்கள் விதைக்கப்பட்ட கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்திற்கு அரசபுலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அச்சமின்றி அகவணக்கம் செய்யபெருமளவிலான மாவீர குடும்பங்களின் உறவுகள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்ததை காணமுடிந்தது.

யுத்தம்நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களால் விடுதலை புலிகளாலும் புனிதமாக பேணிபாதுகாக்கப்பட்டு வந்த மாவீரர் துயிலுமில்லங்கள் இலங்கை அரசின் இராணுவங்களால்ஆக்கிரமிக்கப்பட்டு அடையாளம் எதுவுமின்றி அழிக்கப்பட்டன.

அம்பாரைமாவட்டதின் ஒரே ஒரு துயிலுமில்லமான கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லமும்இராணுவத்தினரால் அழித்தொழித்தனர். இதன் ஒருபகுதி இராணுவ கட்டுப்பாட்டிற்குள்இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.