வெள்ளை வேனில் 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேக நபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அது குறித்த விசாரணைகளின் நிமித்தம் இன்று குற்றிப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவில் அவரை ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. தெரிவித்தது.
மேற் குறித்த சம்பவம் தொடர்பில் அவரைக் கைது செய்ய நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இன்று அவர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

