ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே புதிய அரசாங்கத்தில் தாம் இணைந்து கொண்டதாக தெரிவித்த வசந்த சேனாநாயக்க அங்கு ஜனநாயகம் இல்லாத காரணத்தினாலேயே அங்கிருந்து வெளியேறினேன் என குறிப்பிட்டுள்ளர்.
அலரிமாளிகையில் நேற்றிரவு இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே புதிய அரசாங்கத்தில் சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் அப் பதவியை இராஜினாமா செய்த வசந்த சேனநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் என்னால் உதவ முடியாது போன எமது மக்களுக்காக எதையேனும் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே நான் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டோன். ஆனால் அங்கு ஜனநாயகம் இல்லை அதனால் தான் நான் அங்கிருந்து வெளியேறினேன்.
கட்சி தாவல் செய்தமைக்கு இரு பிரதான கட்சிகளிடமும் மன்னிப்பு நான் மன்னிப்பு கோருகின்றேன். அத்துடன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை பார்த்து மிகவும் மனம் வருந்தினேன். இனி ஐக்கிய தேசியக் கட்சியுடனே இணைந்து பயணிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

