பண்டாரகம கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல பிரேதேசத்தில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
முச்சக்கர வண்டியானது ஜீப் வண்டியுடன் மோதியதால் எதிரில் இருந்த தொலைபேசி கம்பம் ஒன்றுடனும் முச்சக்கர வண்டி மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகிய மூன்று பேரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு மருத்துகளை எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்ற வேளையில் இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது.
தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாய் மற்றும் மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தந்தை தெற்கு அதிவேக வீதியின் போக்குவரத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

