“நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டுள்ளது” என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மங்கள சமரவீர,

“ராஜபக்ஷவின் சதியால் இன்று நாடு பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலையில் சரிந்து வீழ்ந்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது.

சபாநாயகர் மற்றும் அநுரகுமார திஸாநாயக்க கூறுவதைப் போன்று இந் நாட்டில் சட்டபூர்வமான அரசாங்கம் ஒன்றில்லை.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நாங்கள் இதை விட பலத்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.” என தெரிவித்தார்.