பிரதமருக்கு குண்டு துளைக்காத கார் கொண்டுவர உத்தரவிடப்படவில்லை

322 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டு துளைக்காத 2 கார்கள் கொள்வனவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமருக்கு இரண்டு குண்டு துளைக்காத கார்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திக்கு மறுப்பு தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பிரதமருக்கு இதுவரையில் புதிய வாகனங்கள் எடுப்பதற்காக உத்தரவிடப்படவில்லை எனவும் பிரதமர் ஊடககப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment