நாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார்.
மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

