சண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு – இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா

298 0

ஹமாஸ் போராளிகளுடனான சண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா செய்தார்.

பாலஸ்தீனத்தில் காசா முனை பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 நாட்களாக கடும் சண்டை நடந்து வந்தது.

இந்த சண்டையில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது 460 ராக்கெட்டுகளை வீசினர். பதிலுக்கு அவர்களின் 160 நிலைகளை இஸ்ரேல் ராணுவம் குண்டு போட்டு அழித்தது. இந்த நிலையில் அங்கு சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

Leave a comment