புதிய வாக்காளர்களை பொதுத் தேர்தலில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை- மஹிந்த

267 0

திடீனெ பொதுத்தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டிருப்பதால் 2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படியே தேர்தலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள    போதும்,  இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகள் குறித்து மேன்முறையீடு செய்வதற்கு காலம் வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையிலேயே இதனை பூர்த்திசெய்ய எதிர்பார்ந்திருந்தோம்.  எனவே, இவ்வருடம் புதிதாக வாக்குரிமையைப் பெற்ற வாக்காளர்களை இணைத்துக் கொள்ள முடியாமை தொடர்பில் கவலையடைகிறோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் கூறினார்.

இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதிகள் பகிர்ந்தளிப்பதில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment