குறித்த பிரதேசத்திலுள்ள சிறுமியின் தந்தை வெளிநாட்டிற்கு வேலைவாய்பு பெற்று சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி  தரம் 10 இல் கல்வி கற்று வந்த நிலையில் கடந்த 6 மாதகாமாக பாடசாலை செல்லாது வீட்டில் இருந்து வந்துள்ளார்

இந்நிலையில் சிறுமிக்கு குறித்த இளைஞன் கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அவருடன் உரையாடி வந்துள்ள நிலையில் தாயார் ஏனைய குழந்தைகளுடன் தனியறையிலும் சிறுமியை தனியறையிலும் படுத்துறங்கி வந்தனர்.

சிறுமி குறித்த இளைஞருடன் சேர்ந்து தனது அறையின் யன்னல் கிறிலின் ஆணிகளை கழற்றி; யன்னல் ஊடகாக இரவில் இளைஞன் அறைக்கு சென்று இருவரும் ஒன்றாக இருந்து வந்துள்ள நிலையில் சம்பவதினமான  நேற்று திங்கட்கிழமை இரவு வழமைபோல இளைஞன் யன்னல் ஊடாக அறைக்குள் சென்ற போது அதனைக்கண்டு நாய் குரைத்துள்ளது.

இதனையடுத்து  நாய் குரைத்த சத்தம் கேட்டு தாயார் கண்விழித்து வீட்டை சோதனையிட்டபோது அறையில் இருந்த இளைஞன் அங்கிருந்து யன்னல் ஊடாக தப்பி ஓடியுள்ளார். இதனைக்கண்ட தாயார் சிறுமியிடம் விசாரித்தபோது இளைஞர் தொடர்பாக தகவல் பெற்றுக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் குறித்த இளைஞனை நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து  கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது