ஏமன் போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு

2 0

ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது.

ஏமனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா கடந்த 4 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கிறது. இந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்க அதிபர் ஆதரவு படையினர் கடந்த ஒரு வார காலமாக அங்கு கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

இரு தரப்புக்குமான இந்த போரில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகி வருகின்றனர். இதில் 24 மணி நேரத்தில் மட்டும் 43 கிளர்ச்சியாளர்களும், அதிபர் ஆதரவு படையினர் 9 பேரும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

அங்கு தொடர்ந்து சண்டை நீடித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின்படி 110 கிளர்ச்சியாளர்கள், அதிபர் ஆதரவு படையினர் 32 பேர் மற்றும் அப்பாவி மக்கள் 7 பேர் என 149 பேர் இந்த போரில் பலியானதாக தெரிகிறது.

Related Post

தென் சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு-சீனா

Posted by - July 13, 2016 0
தென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள…

ரொஹிங்கிய கிளர்ச்சி குழு ஒரு தலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது

Posted by - September 10, 2017 0
ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் முகம்கொடுத்துள்ள மனிதாபிமான நெருக்கடி காரணமாக ரொஹிங்கிய கிளர்ச்சி குழுவான அர்சா எனப்படும் அராகான் ரொஹிங்கியர் பாதுகாப்பு இராணுவம் என்ற அமைப்பு ஒரு மாதகால…

குவின்ஸ்லாந்தில் உள்ள முருகை கற்பாறைகள் அழிவு

Posted by - April 10, 2017 0
அவுஸ்ரேலியாவின் குவின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள பாரியளவான முருகை கற்பாறைகள், பெரும் அவதான நிலையயை அடைந்துள்ளது. அவுஸ்ரேலிய அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த…

விசாரணையை நேரலையில் ஒளிபரப்பக்கோரும் வழக்கில் தீர்ப்பு நிறுத்தி வைப்பு

Posted by - August 25, 2018 0
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் தேசிய நலன் சார்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பக்கோரும் வழக்கில் தீர்ப்பை கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.