மு.க.ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது- அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

219 0

மு.க.ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது ஏனென்றால் அவருக்கு கட்டம் சரியில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற அ.தி.மு.க.47-ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க தொண்டர் ஒருவரால் கூட ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று கூற முடியாது. ஏனென்றால் அவருக்கு கட்டம் சரியில்லை,  எப்போது தேர்தல் வந்தாலும்  பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். எந்த நடிகராவது, எந்த  இயக்குநராவது தன் வீட்டில் வேலை செய்யும் பணியாளர் மகளுக்கு திருமணம் செய்ய தாலி வாங்கி கொடுத்துள்ளாரா அல்லது அவரது பிள்ளைகளுக்கு படிக்க 100 ரூபாய்க்கு கால்குலேட்டர் வாங்கி கொடுத்துள்ளாரா? அ.தி.மு.க பற்றி தரம் தாழ்ந்து பேசுபவர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி அ.தி.மு.க தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். யாரும்  சோடை கிடையாது .இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து, கந்தர் வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட ஏற்பாடுகளை நகர செயலாளர் தங்கப்பன், ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர்  சேகர், கொப்பனாபட்டி ஊராட்சி மன்ற தலைவர்  மாரிமுத்து ஆகியோர்  செய்திருந்தனர்

 

Leave a comment