கலைஞர் வேந்தன் ஆறுமுகசாமி லண்டனில் காலமானார்!

352 0

வேந்தன் ஆறுமுகசாமி என்ற கலைஞர் தனது 45வது வயதில் நேற்று லண்டனில் காலமானார். தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் கலைக் குடும்பத்தில் நீண்ட கால(25 வருடங்கள் ) நடிகராகவும் இசைக் கலைஞராகவும் இருந்தார்.

லண்டனில் 1992இல் 19 வயது வாலிபனாக   நாடக இயக்கத்தில் இணைந்தவர் இவர். நான் நெறிப்படுத்திய பெரும்பாலான சிறுவர்நாடகங்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை இசை வழங்கியவர்.”கானசாகரம்” என்ற எமது ஈழத்து மெல்லிசை நிகழ்ச்சிக்கும் புலம் பெயர் நாடுகளில்அவரே பெரும்பாலும் இசையை நிர்வகித்து வந்துள்ளார்.சென்ற வருடம் இடம்பெற்ற எமது நாடக விழாவில் அவரது பங்கு மிக சிறப்பானது.

புலத்தில் ,எமது “யுகதர்மம் “,” முகமில்லாத மனிதர்கள் “,” எரிகின்ற எங்கள் தேசம்”,”பெயர்வு” ஆகிய நாடகங்களுக்கு இசைவழங்கி நடித்ததுடன் , “ஐயா லெக்சன் கேட்க்கிறார் ” ,” எப்போ வருவாரோ ” ,”சர்ச்சை”ஆகிய நாடகங்களில் சிறப்பாக நடித்தவர். நடிப்புத்துறையின் ஆர்வம் காரணமாக லண்டனிலும், சென்னையிலும் சில திரைப் படங்களிலும் நடித்துப் பெயர் பெற்றவர். அவர் நடித்த “உப்பு” என்ற திரைப் படம் விருது பெற்ற திரைப் படமாகும்..சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

எமது நாடக கலைப் பயணங்களில் பிரான்ஸ் ,சுவிஸ் ,நோர்வே,கனடா, ஆகிய நாடுகளுக்கும் பயணித்தவர்.

லண்டனில் இசைத்துறையில் இளையவர்கள் பலரை பயிற்றுவித்துள்ளார்.பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பல திறமைகள் கொண்ட இவரது இழப்பு, தமிழ் நாடக இயக்கத்துக்கு மட்டுமல்ல தமிழ் கலையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

Leave a comment