தலைமன்னார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு

3 0

தலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை நேற்று   ஞாயிற்றுக்கிழமை மாலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள ‘கேரள கஞ்சா’  பொதிகளின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபாய் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படை அதிகாரிகள் சிலர் தலைமன்னார் கடற்கரை பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை கரைக்கு அருகில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த  கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 39 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகளை   கடற்படையினர், தலைமன்னார்   பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில்  தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்கு….(காணொளி)

Posted by - March 1, 2017 0
  முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் இன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் கையளித்ததை அடுத்து,…

சந்தேகத்தை ஏற்படுத்தும் பொலிஸாரின் அவசர தகவல்!

Posted by - July 24, 2017 0
யாழில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீது வைக்கப்படதல்ல என பொலிஸார் அவசர அவசரமாக தெரிவிப்பது பலத்த சந்தேகத்தை எற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர்…

நெடுங்கேணியில் இளம்குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சி

Posted by - March 21, 2017 0
நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பத்தினர் பெற்ற நுண் கடணைச் செலுத்த முடியாத நிலையில் கடந்த சனிக்கிழமை தாயும் பிள்ளையும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில்…

புதிய பிரதமர் மகிந்தவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை – ஸ்ரீநேசன்

Posted by - November 6, 2018 0
நான் கொள்கைக்கும், நீதிக்கும் தலை வணங்குபவன். ஒரு போதும் மாற்றுக் கட்சிக்கு தாவமாட்டடேன். கட்சியின் முடிவுக்கு மாறாகவும் நடக்கப்போவதில்லை. கட்சி மாறுவதென்பது செல்வாக்கை விலைபேசி விற்பதற்குச் சமனானது. …

முதலமைச்சரின் காணிப் பிணக்கு கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்துள்ளனர்

Posted by - December 16, 2017 0
வட மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சரும், மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து…

Leave a comment

Your email address will not be published.