அரூர் சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்- ஜிகே வாசன்

339 0

அரூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவம் குறித்து கொலை குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டணை வழங்க வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம் அரூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்து இருப்பது, மிருகத்தனமான செயல். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடைபெறுவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

காவல்துறையின் கடுமையான நடவடிக்கை மூலமும், சட்டத்தின் அடிப்படையிலும் இந்த கொலை குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டணையை உடனடியாக வழங்க வேண்டும். இது போன்ற குற்றங்கள் இனி மேலும் நடைபெறாமல் இருக்க காவல்துறை இரும்பு கரம்கொண்டு அடக்க வேண்டும்.

நாட்டில் ஒவ்வொருவரும் இழிவான எண்ணங்களுக்கு இடங்கொடாமல், தனிமனித ஒழுக்கத்தையும், சமத்துவத்தையும், சகோதரத்ததையும் நாம் அனைவரிடமும் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave a comment