ஜோர்டான் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜோர்டான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெட்ரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியாகினர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
ஜோர்டான் நாட்டின் பழமையான பாலைவன நகரமான பெட்ராவில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து ஜோர்டான் நாட்டு ராணுவம் ஹெலிகாப்டர்களில் சென்று சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

