தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஐ.தே.மு. யின் நிலைப்பாடு எடுத்துரைப்பு

309 0

ஜனாதிபதியினால் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று (10) நடாத்தியுள்ளனர்.

அரசியல் யாப்புக்கு புறம்பாக தேர்தலை அறிவித்தமை சட்டவிரோதமானது எனவும் இதன் சட்டத் தன்மை தொடர்பிலும் தேர்தல்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாகவும் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நியாயமான முறையில் செவிமடுத்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு தங்களது அறிவிப்புக்கு என்னவிதமான பதிலை அளித்தது என ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியதற்கு, அது குறித்து அறிவிக்க இது பொருத்தமான நேரம் அல்லவெனவும் அவர் பதிலளித்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஐ.தே.முன்னணி சார்பில் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, கயந்த கருணாதிலக்க, அகில விராஜ் காரியவசம், ஹர்ஷத சில்வா, மற்றும் ஹிருனிகா பிரேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a comment