சிறைச்சாலை அதிகாரிகள் ஆறு பேருக்கு இடமாற்றம்

371 0

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சேவையாற்றிய ஆறு சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அமுலாகும் வகையில் இடம் மாற்றப்பட்டு உள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் சம்பந்தமாக சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் பின்னர் குறித்த ஆறு பேரும் இடமாற்றம் செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அந்த ஆறு பேரில் சிறைச்சாலை ஜெயிலர்கள் மூன்று பேரும் இரண்டு பெண் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகளின் நடத்தை சம்பந்தமாக கிடைத்த தகவலுக்கமைய சிறைச்சாலை புலனாய்வு பிரிவினால் விசாரணை செய்யப்பட்டது.

சிறைச்சாலை அதிகாரிகளின் நடத்தை சம்பந்தமாக நடத்தப்படுகின்ற புலனாய்வு விசாரணை மேலும் சில சிறைச்சாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் கூறினார்.

Leave a comment