ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கப்போவதில்லை – மனோ

233 0

கொள்கையுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி புதிய அரசாங்கத்தை எதிர்ப்பதுடன் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கப்போவதில்லை என முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார்.

அட்டன் கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின், நாட்டில் ஏற்பட்டுள்ள தற்கால அரசியல் மாற்றம் தொடர்பான கொள்கை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் அரசாங்கம் கலைக்கப்பட்ட, ஜனநாயகத்திற்கு எதிரான புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதை ஜனநாயக கொள்கையுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கப் போவதில்லை.

அண்மையில் ஜனாதிபதி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆறு உறுப்பினர்களை அழைத்து தமது புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் எமக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனவும் அல்லது வாக்களிப்பின்போது நடுநிலை வகிக்க வேண்டும் எனவும் மேலும் ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்க கூடாதெனவும் எங்களிடம் கோரிக்கை முன்வைத்தார்.

எனினும் அந்த மூன்று கோரிக்கையை நாம் நிராகரித்ததுடன்  ஐக்கிய தேசிய முன்னணி பல கட்சிகளுக்கு சொந்தமானது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள சகலரும் ஒடி ஒடி வாக்கு சேகரித்தோம் இதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகவே இது தனி ஐக்கிய தேசிய கட்சியல்ல நீங்கள் முரண்பாடுகள் தொடர்பில் எம்மோடு ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதியிடம் நாம் கேட்போது அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என்றார்.

மேலும்‍ தமிழ் முற்போக்கு கூட்ணியின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டில் பலராலும் பாராட்டப்படுவதுடன்  எமது கொள்கையை கண்டு பெரும்பான்மையினரும் எம்மோடு இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.

Leave a comment