வெள்ளவத்தை 65 ஆம் இலக்க சமிஞ்சை தூணுக்கருகில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயில் மோதி பலியாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெள்ளவத்தை 65 ஆம் இலக்க சமிஞ்சை தூணுக்கருகில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயில் மோதி பலியாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த ரயில் ஒன்றுடனேயே குறித்த நபர் மோதி நேற்று மாலை 3.35 மணியளவில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பலியானவர் தொடர்பில் எதுவித தகவலும் தெரியவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் அவரது சடலத்தை களுபோவில வைத்தியசாலையில் பிரேத அறையில் வைத்துள்ளனர்.
மேலும் மரணித்தவர் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, அவரை இனங்காணும் நடவடிக்கைகளின் பின்னரே பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

