கசிப்பு போத்தல்களுடன் பெண் கைது

208 0

25 சட்டவிரோத கசிப்பு போத்தல்களை தந்திரமான முறையில் மறைத்து வைத்துக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரை தங்கொட்டுவ மாவத்தகம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருத்தியே இவ்வாறு கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டவராவார்.

தங்கொட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பண்டிருப்பு மாவதகம வீதியில் நேற்றிரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவ்வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பெண் ஒருவரை நிறுத்தி அவளிடம் விசாரணை செய்துள்ளனர்.

அதன் போது தான் ஒரு தொகை அரிசியை எடுத்துச் செல்வதாக அப்பெண் பொலிஸாரிடம் கூறிய போதும் அதில் திருப்தியடையாத பொலிஸார் அப்பெண் கொண்டு சென்ற பேக்கை சோதனையிட்டுள்ளனர். இதன் போதே அந்த பையினுள் இவ்வாறு 25 கசிப்பு போத்தல்கள் இருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும் கைப்பற்றப்பட்ட கசிப்பு போத்தல்களுடன் மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment