வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்

17 0

வவுனியா, நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டது.

வவுனியா, நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது 12 அடி நீளமான முதலை ஓன்றை அவதானித்துள்ளனர். இதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட அவ்விடத்தில் கூடிய போது முதலை வீதியோரத்தில் இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டது.

இதனையடுத்து ஊர்மக்கள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்தனர். அவர்கள் முதலையை மீட்டு பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.

Related Post

முள்ளிக்குளம் மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சந்தித்தார்!

Posted by - April 3, 2017 0
கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முள்ளிக்குள மக்களை இன்று காலை சர்வதே மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரத்தை தவற விட்ட பொலிஸார்

Posted by - November 17, 2016 0
யாழ்ப்பாணம் நகரப் போக்குவரத்துப் பொலிஸார் பிரிவில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத பெண் ஒருவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் காணாமல்…

வல்வெட்டித்துறையில் இரு சாராருக்கிடையில் மோதல்

Posted by - June 9, 2018 0
வல்வெட்டித்துறைப் பகுதியில் இரு சாராருக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் மந்திகை மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டள்ளனர். சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னின்று நடாத்தும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 8, 2018 0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடாத்தும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில்…

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கையரை தென்கொரிய நீதிமன்றம் விடுவித்தது 

Posted by - July 19, 2017 0
தென்கொரியாவில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் அதில் இருந்து அந்த நாட்டின் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். 51 வயதான குறித்த நபர்இ 1998ஆம் ஆண்டு 18…

Leave a comment

Your email address will not be published.