யாழில் வீதியில் குப்பை கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை

28 0

யாழ். நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர் நேற்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். நகரத்தின் பிரதான வீதிகளான ஸ்ரான்லி றோட், கே.கே.எஸ் வீதி மற்றும் பிரதான வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகளிலும் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்படுவதை பொலிஸார் தடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்களினால் குப்பைகள் பொருத்தமில்லாத இடங்களில் கொட்டப்படுவதற்கு, கழிவகற்றல் செயன்முறை உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே காரணம்.

எனவே யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபை ஆகியன பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுவதற்குப் பொருத்தமான இடங்களை உடனடியாக அடையாளப்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு குப்பைகளைக் கொட்டுவதற்கு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரும் பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் பொலிஸார் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

சட்டத்திற்கு புறம்பான வகையில் வர்த்தக நிலையங்களின் கழிவுகளை வெளியேற்றிய 37 வர்த்தகர்கள் மீது இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, வீதிகளில் குப்பைகளைக் கொட்டிய 7 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post

மட்டு.கீச்சான் பள்ளத்தில் சக்திவாய்ந்த கைக்குண்டுகள் மீட்பு

Posted by - March 15, 2017 0
மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மரமொன்றை வெட்டிக்கொண்டிருந்த இரண்டு பேர் இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் இராணுவத்தினர்…

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - July 14, 2018 0
வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல்இ பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா…

பாடசாலையில் இருந்து தற்கொலை அங்கி மீட்பு

Posted by - September 23, 2016 0
வவுனியாவில் உள்ள பிரபல்யமான பாடசாலையொன்றின் வளாகத்திலிருந்து தற்கொலை அங்கியும், அலைபேசி சார்ஜரும் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா விபுலானந்தா பாடசாலையின் வளவில் புதியக் கட்டடம் அமைப்பதற்கான…

லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் வியாழக்கிழமை இறுதி தீர்மானம்

Posted by - July 17, 2017 0
கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தேசிய காவற்துறை ஆணைக்குழு…

“நீ சாகிறதுக்கு தானே போனனி, செத்துப்போ” எனக் கூறி, தீக்குச்சியை கொளுத்தி மகள் மேல் பற்ற வைத்த தந்தை!

Posted by - April 2, 2017 0
யாழ்ப்பாண மாவட்டம் அளவெட்டி மத்தியில் கடந்த வாரம் தந்தையால் தீமூட்டி கடுமையான காயங்களுக்குள்ளான பெண்ணொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.