பிரான்சில் ஆரம்பமாகியுள்ள மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள்- 2018

31 0

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2018 சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன.
கடந்த (04.11.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 மணியளவில் பாரிசின் புறநகர்ப்பகுதியான செல் பகுதியில் தனிநடிப்பு, கட்டுரை, கவிதை ஆகியபோட்டிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் ஈகைச்சுடரினை 25.10.2007 அன்று குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நித்திலனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.
மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
தனிநடிப்பில் கடந்த ஆண்டுகளை விட இம்முறை அதிகமாணவர்கள் பங்குபற்றியிருப்பதாகவும் –
ஓவியப்போட்டியிலும் அதிகமாணவர்கள் பங்குபற்றியிருப்பதாகவும் –
எதிர்வரும் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் மாவீரர் நினைவு சுமந்த பேச்சு, பாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் – ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Related Post

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் நினைவு கூரப்பட்ட சிறிலங்கா அரசின் இனப்படுகொலையான கறுப்பு யூலை

Posted by - July 22, 2018 0
கறுப்பு யூலை என்று அழைக்கப்படும் 1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் திகதி சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் 35வது ஆண்டின் நினைவு நிகழ்வுகள்…

ஆஸி.யில் இந்தியப் பெண்ணை சித்திரவதை செய்த இலங்கைத் தம்பதிகள்

Posted by - December 13, 2017 0
அவுஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்கப்பட்டுள்ளார். 

மொரீஷியஸ் நாட்டிலும் தமிழ்மொழியை கற்பிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம்!

Posted by - March 3, 2018 0
மொரீஷியஸில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு முறையாகத் தமிழ் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டு துணை அதிபர் தெரிவித்துள்ளார்.மொரீஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கோவைக்கு விஜயம்…

மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 03/03/2019 பி.பகல் 18.00மணியளவில் சுவிஸ் ஜெனிவா வந்தடைந்துவிட்டது

Posted by - March 4, 2019 0
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி இன்று 03/03/2019. காலை லுசான் மாநகரிலிருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 03/03/2019 பி.பகல் 18.00மணியளவில்…

நெதர்லாந்தின் அல்மேரே நகரில் நினைவெழுச்சி நாள் 2017

Posted by - October 16, 2017 0
நெதர்லாந்தின் அல்மேரே நகரில் நினைவெழுச்சி நாள் 2017உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவில் வெளியில் தீயுடன் சங்கமமான தியாகிகள் குமரப்பா…

Leave a comment

Your email address will not be published.