நிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம்!

274 0

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய், பண மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய நிரவ் மோடியின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி. இவரும், இவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றனர். இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கதுறையினர் விசாரித்து வருகின்றனர்.

நிரவ் மோடியை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்க துறை பலமுறை, ‘நோட்டீஸ்’ அனுப்பியும், ஆஜராகவில்லை. இவரை கைது செய்ய, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீசார், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், துபாயில் நிரவ் மோடி மற்றும் அவரது குழு நிறுவனங்கள் என மொத்தம் 11 நிறுவனங்களின் ரூ.56.8 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a comment