ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்து இருப்பது சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளன. இதற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

