மேல்மாகாண சபையில் பதற்றம்

274 0

மேல்மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவர் இன்று எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியை சேர்ந்த நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மற்றும் நிரோஷா அத்துகோரள ஆகிய உறுப்பினர்களே இவ்வாறு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்.

குறித்த இரு உறுப்பினர்களும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்ததையடுத்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் அதன்காரணமாக அமர்வினை 15 நிமிடம் பிற்போடுவதற்கு தலைவர் சுனில் விஜேரத்ன தீர்மானித்தார்.

குறித்த இரு உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்ததை அடுத்து ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் எழுந்து நின்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்களும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் சபையில் அமைதி நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment