தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் புதன்கிழமை சந்தித்து பேசவுள்ளார்.
இதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி விடுத்துள்ளார்.
அதன்படி இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

