பின்கதவினால் பிரதமரான மகிந்த தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ரோசி

203 0

நாட்டு மக்களின் 62 இலட்சம் பேர் வாக்களித்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை ஆட்சியில் அமர வைத்தது, இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் நிராகரிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் பிரதமராக்குவதற்கு அல்ல என தெரிவிக்கும் கொழும்பு நகராதிபதி ரோசி சேனாநாயக்க பின்கதவினால் புதிய பிரதமாராக பதவியேற்று கொண்ட மகிந்த தனது பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றில் நிரூபித்து காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு புதிய நகர மண்டப கேட்போர் கூடத்தில் நேற்று ஐ.தே.க. பாராளுமன்ற,கொழும்பு மாநகர மற்றும் ஐ,தே.க. ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு மக்கள் வாக்களித்தது மீண்டு மகிந்தவை ஆட்சி கதிரையில் அமர வைக்க அல்ல. 18 அரசியலமைப்பின் மூலம் சர்வதிகாரியாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை தேர்தலில் தோற்கடித்து  மக்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் நாட்டை ஒப்படைத்தனர்.

இதற்கு அவர் மக்கள் ஏமாற்றி மீண்டு நாட்டை ஓர் சர்வதிகாரியின் கரங்களில் ஒப்படைத்துள்ளார். அன்று ஜனாதிபதி தேர்தலின் போது ரணி்ல் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்பதினாலலேயே மக்கள் இவருக்கு வாக்களித்தனர்.

ஆனால் இன்று அவரோ மக்களின் வாக்குகளை ஏமாற்றி சட்டத்துக்கும், அரசியலமைப்புக்கும் முரணாக பிரதமரை நியமித்ததுள்ளார். இதற்கு சமய தலைவர்கள், சர்வதேசம், நாட்டு மக்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.

இன்னைய அரசியல் நிலைமை எமது சந்ததியினரின் எதிர்கால வாழ்க்கையில் விளையாடும் செயலாகியுள்ளது. மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமருவதை விடுத்து இவர்கள் இன்று காசு கொடுத்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

முறையற்ற வகையில் பதவிக்கு வந்து சிறிது நேரத்திலேயே தமது அநாகரீகமான தமது சர்வாதிகாரத்தை ஊடகங்களுக்கு அடித்ததிலும், அரச நிறுவனங்களுக்கு சென்றதிலும் மக்கள் நன்கு அறிந்து கொள்ள முடிந்திருக்கும்.

இந்த சர்வாதிகாரிகளையே அன்று நாம் வெற்றிக்கொண்டோம். அவரை திட்டித்தீர்த்து பதவியையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். ஆனால் இன்று இவரது மாற்றம் எமது நாட்டுக்கு பொருளாதார தடைவிதிப்பையும், ஜி.எஸ்.பி. சலுகை மறுப்பையும் சர்வதேச மத்தியில் அபகீர்த்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பொறுப்பு கூற வேண்டிய ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபித்து சட்டத்துக்குட்பட்ட ஆட்சியமைக்க முன்வரவேண்டும் என்றார்.

Leave a comment