திருச்சியில் இருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முயற்சியால் 4 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி அருகேயுள்ள கீரப்பட்டி கிராமத்தை சேர்ந்த குறைவேல் மனைவி கிருஷ்ணவேணிக்கு கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

