கடந்த காலங்களில் நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்படும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன, ஆசியாவின் குப்பை கொட்டும் தளமாக இலங்கை மாறியமைக்கு இவ்வாறான ஒப்பந்தங்களே காரணம் எனவும் குறிப்பிட்டார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயகவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி விட்டு, மங்கள சமரவீரவை நிதியமைச்சராக நியமித்தமை பாரிய தவறாகும்.
ஐக்கிய தேசிய கட்சியின் இவ்வாறான முறையற்ற பொருளாதார முகாமைத்துவமே பொருளாதார வீழ்ச்சியிக்கான பிரதான காரணம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

