தமிழரசுக் கட்சி ஒன்றும் சுமந்தரனின் காபரேட் நிறுவனமல்ல!

25 0
தனி நபர் சர்வாதிகாரத்தில் இருந்து தமிழரசுக் கட்சியையும் கூட்டமைபையும் காப்பாற்றுங்கள்.
.
சம்பந்தர் ஐயாவுக்கு பணிவான வேண்டுகோள்.
1970பதுகளில் திருசெலவம் போன்றவர்கள் செல்வநாயகத்தின் முதுமையை பயன்படுத்தி உள்நோக்கங்களுடன் தமிழரசுகட்சியை கைபற்றினார்கள். அவர்கள் காலம்காலமாகக் கட்ச்சியை வளர்த்த விசுவாசிகளை வெளியேறச் செய்தனர். கட்ச்சியை வலுவிளக்க செய்தார்கள். இது இளைஞர்களின் விரக்திக்கு வழிவகுத்தது.

.
வரலாறு தெரிந்த நீங்களே அத்தகைய ஒரு சூழலுக்கு வழிவகுக்கலாமா? இன்று உருவாகும் கட்ச்சித் தாவல்களுக்கு சுமந்திரனின் நடவடிக்கைகள்தான் காரணம். தயவுசெய்து சுமந்திரனை கட்டுபடுத்தி கட்சியை காப்பாற்றுங்கள். கட்சியில் பின்தள்ளப்பட்டுள்ள வடகிழக்கைச் சேர்ந்த கட்சி விசுவாசிகளை முன்னிலைப் படுத்தி கட்சியை மீண்டும் பலப்படுத்துங்கள்.
.
உங்கள் வயோதிபத்தை பயன்படுத்தி உங்களைச் சூழல் கைதியாக்கியுள்ள சுமந்திரன் யார்? அவரது உள்நோக்கங்கள் என்ன என்பவை யாருக்கும் புரியவில்லை. ரணிலா மகிந்தவா என்பதைவிட கட்சியா கூட்டமைப்பா அல்லது சுமந்திரனா என்பதுதான் வடகிழக்கு தமிழர்களின் இன்றைய தலையாய பிரச்சினையாகி உள்ளது. இதனை உணருங்கள்.
.
உருவாகிவரும் கட்சித் தாவவல் போன்ற தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பின் சீர்குலைவுச் சூழலுக்கு கட்சியில் கூட்டமைப்பில் ஜனநாயகமற்றுப் போனதே முக்கிய காரணமாகும். கட்சி கூட்டமைப்பு சீர்குலையும் சூழலை தடுத்து நிறுத்துவதே உங்கள் முன்னுள்ள முதல் கடமையாகும்.
.
ரணிலா மகிந்தவா என்பதைவிட கட்சியா/கூட்டமைப்பா அல்லது தனிநபர்களா என்கிற முடிவை நீங்கள் உடனடியாக எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன். சுமந்திரன் கொடுக்கும் பணிகளை கட்சி /கூட்டமைப்பு செய்வதில் இருந்து கட்ச்சி கொடுக்கும் பணிகளை மட்டும் சுமந்திரனும் ஏனைய கட்ச்சி உறுப்பினர்களும் செய்கிற சூழல் உருவாக்கப்படவேண்டும்.
.
செல்வநாயகம் அவர்கள் காலத்தைபோல அதிகார பரவலாக்கமுள்ள கட்சிக் கிழைகள்மூலம் மக்கள் மீண்டும் அதிகார மயப்படுத்தப்பட வேண்டும்.
.
தமிழரசுக் கட்சி ஒன்றும் சுமந்தரனின் காபரேட் நிறுவனமல்ல. சுமந்திரனின் தவறுகளால் கட்சியில் இருந்து வெளியேறிய வியாழேந்திரன் போன்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறதில் காட்டுகிற அவசரத்தை தனி நபர்களிடமிருந்து கட்ச்சியைக் காப்பாற்றுவதில் காட்டவேண்டுமென்று தமிழரசுக் கட்சியிடமும் கூட்டமைபிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
.
கட்சிக் கிளைகள் மூலம் வடகிழக்கு மக்களை அதிகாரமயபடுத்துக என்பதே இன்றைய அவசரத் தேவையாகும். வடகிழக்கிலும் உலகளாவியும் வாழும் தமிழர்களே இதனை உரத்து சொல்லுங்கள்.
வ.ஐ.ச. ஜெயபாலன்

Related Post

மெய்யான கொள்கைக் கூட்டு எது? – நிலாந்தன்

Posted by - December 17, 2017 0
அரசியற் கைதிகள் மறுபடியும் போராடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமது கோரிக்கைகளை வென்று தருவதாக வாக்குறுதியளித்த எவரும் அதைச் செய்து முடிக்கவில்லை என்றும் கடந்த எட்டாண்டுகளில் இவ்வாறு சில…

போர்க்குற்றச்சாட்டு விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டே நடத்தப்படும் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

Posted by - April 18, 2017 0
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டே நடத்தப்படும் என்று, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகம் – சிதம்பரம் ஆலயத்துக்கு சென்றிருந்த அவர், இந்திய ஊடகங்களிடம்…

இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு அல் ஹூசைன் கோரிக்கை

Posted by - March 22, 2017 0
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செய்ட் அல் ஹூசைன் இலங்கையின்…

சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 8பேரை நியமித்துள்ளனர்

Posted by - June 26, 2016 0
தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 8பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

கேப்பாபுலவு விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை – சம்பந்தன்

Posted by - February 16, 2017 0
கேப்பாபுலவு விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக நேற்றைய…

Leave a comment

Your email address will not be published.