எச்1பி விசா மோசடி – அமெரிக்க வாழ் இந்தியர் கைது

314 0

எச்1பி விசா மோசடி தொடர்பாக அமெரிக்க வாழ் இந்தியரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிஷோர்குமார், கவுரு (46). அமெரிக்க வாழ் இந்தியரான இவர் 4 கன்சல்டிங் கம்பெனிகள் நடத்தி வருகிறார். அவற்றுக்கு தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.

இவர் கம்பெனியில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு போலி ஆவணங்கள் மூலம் எச்1பி விசா பெற்று தந்துள்ளார். மேலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தராமல் இருந்தார்.

இந்த குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Leave a comment