அமெரிக்காவில் உள்ள மியாமி விமான நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டிய வாலிபரை உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் பிடித்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட மாயப்பணமான பிட்காயின்களை வாங்கி சேமித்து வைக்க ஆசைப்பட்டார். இதற்காக இணையத்தளம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரிடம் ஆயிரம் டாலர்களை கொடுத்து ஏமாந்தார்.


