பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

29 0

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று 01.11.2018 வியாழக்கிழமை ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நெவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
பொதுச்சுடரினை லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்க நிர்வாகி திருமதி நேசராசா சிவகுமாரி அவர்கள் ஏற்றிவைத்தர். ஈகைச்சுடரினை, பிரிகேடியார் தமிழ்ச் செல்வனின் துணைவியார் ஏற்றி மலர்மாலையை அணிவித்தார். கேணல் பரிதியின் நினைவுச் சின்னத்திற்கு அவரது புதல்வி மலர்மாலை அணிவித்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர் வணக்கமும், மலர் வணக்கமும் இடம் பெற்றது.
லாக்கூர்நெவ் நகரசபை உறுப்பினர் திரு. Couteau-Russel > பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Marie-George Buffet , தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழ் உணர்வாளர் திரு ஜெயப்பிரகாசம் மற்றும் தமிழர் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உரையாற்றினர்.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரம் முழங்க நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

Related Post

தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 11வது நினைவேந்தல் நிகழ்வு

Posted by - December 18, 2017 0
1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் , வலியையும் .. உலகெல்லாம் உணரச் செய்து தனது 68 வது அகவையில் இயற்கை எய்திய…

சித்திரவதை செய்து இளைஞர் கொலை சுன்னாகம் பொலிஸார் 5 பேருர் மீது கொலை வழக்கு (முழுமையான விபரங்கள்)

Posted by - August 27, 2016 0
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில்…

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்த கிரிக்கட் போட்டிகள் – ரணில் ஆலோசனை

Posted by - February 16, 2017 0
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக் கொள்ள கிரிக்கட் போட்டிகளை பயன்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பென்பராவில் நடைபெற்ற இலங்கை மற்றும்…

வித்தியா படுகொலை வழக்கு – வழக்குத் தொடுநர் சாட்சியங்கள் நிறைவு

Posted by - August 3, 2017 0
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மூன்று நீதிபதிகளை கொண்ட நீதாய விளக்க அமர்வில், மனுதாரர் தரப்பு சாட்சியங்கள்…

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொதுச் நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலீஸாரினால் இடைநிறுத்தம்(காணொளி)

Posted by - January 5, 2017 0
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள்…

Leave a comment

Your email address will not be published.