ஹிலாரி-டிரம்ப் நாளை நேரடி விவாதம்

273 0

201609251040292941_united-states-presidential-election-clinton-trump-debate_secvpfஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் – டிரம்ப் இடையே நேரடி விவாதம் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது.அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இருவரும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட தொடங்கினர். தங்கள் கருத்துக்களையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைக்கின்றனர்.

இதுவரை இருவரும் நேருக்கு நேராக மோதும் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நேரடி விவாதம் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது.

இந்த நேரடி விவாதம் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக நாளை (திங்கட்கிழமை) நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்டரா பல்கலைக்கழகத்தில் இரவு 9 முதல் 10.30 மணி வரை விவாதம் நடக்கிறது.

அதில் அவர்கள் இருவரும் அமெரிக்காவின் நிலை, செயல்படுத்த உள்ள திட்டங்கள், அமெரிக்க பாதுகாப்பு ஆகிய 3 தலைப்புகளின் கீழ் நேரடியாக பேசி கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

ஹிலாரி-டிரம்ப் மோதும் நேரடி விவாதம் அமெரிக்க டெலிவி‌ஷன்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதை அமெரிக்க மற்றும் சர்வதேச நாடுகளை சேர்ந்த 10 கோடி மக்கள் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவாதத்தின் மூலம் யாருக்கு ஓட்டு போடுவது என ஊசலாட்டத்தில் இருக்கும் அமெரிக்க வாக்காளர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என கருதப்படுகிறது.

கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதுதான் முதன் முறையாக ஒரு பெண் போட்டியிடுகிறார். எனவே நாளை நடைபெறும் இந்த நேரடி விவாதம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.

மேலும் 2-வது நேரடி விவாதம் அக்டோபர் 4-ந்தேதி நடக்கிறது. அது துணை அதிபருக்கான விவாதமாகும். விர்ஜீனியாவில் உள்ள லாங்வுட் பல்கலைக் கழகத்தில் விவாதம் நடக்கிறது.

3-வது விவாதம் அக்டோபர் 9-ந்தேதி செயின்ட் லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. அதில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஹிலாரியும், டிரம்பும் மோதுகிறார்கள். இறுதி விவாதம் அக்டோபர் 19-ந்தேதி லாஸ்வேகாசில் உள்ள நிவேடா பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.