தனிமனிதர்களையும் அவர்களது பதவியையும் கருத்திற்கொண்டு ஆதரவு வழங்கமாட்டோம் -ஸ்ரீநேசன்

218 0

நாம் தனிமனிதர்களையும் அவர்களது பதவியையும் கருத்திற் கொண்டு ஆதரவை வழங்கமர்டோம்.எங்களது கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்ற சித்தமாயிருப்பவருக்கே  எமது ஆதரவை வழங்குவோம். இதில் எந்த மாற்றமுமில்லை என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

சமகாலத்து அரசியலுக்குள் தமிழத் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழத் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை நாம் இச்சந்தர்ப்பத்தை கவனமாகவும் கருத்துச் செறிவோடும் கையாண்டு வருகிறோம்.

சம்பந்தன்   கூறியது போன்று நாங்கள் எழுபது வருடமாக இந்நாட்டின் தலைவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். ஆகவேதான் இன்றைய சூழலில் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை இன்றுவரை எட்டவில்லை.இரு தரப்புக்களும் எம்மோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.எமக்குத்தேவை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அறுதியும் இறுதியுமான அரசியல் தீர்வுதான்.நிலைப்பாட்டிலிருந்து நாம் விலகப்போவதில்லை

சமகாலத்து அரசியலுக்குள் தமிழத் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்

இன்றைய அரசியற் சூழல் மிக நெருக்கடியானது. ஜனாதிபதி திடீரென மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை இந்நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடியை தோற்றுவித்துவிட்டது.

இதில் வெளிநாட்டு இராஜதந்திரிகள்¸ அரசியல் பிரமுகர்கள் ஆகியோரது அழுத்தங்களும் உரத்துக் காணப்படுகின்றன.

நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களின் அரசியல் விடுதலைக்காக பாடுபட்டு வருகின்ற தமிழத் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான அரசியல் நெருக்கடி நேரத்தில் இருதரப்போடும் பேசுவதில் யாருமே குறைகாண முடியாது.

பேச்சுவார்த்தை என்பது எங்களது கோரிக்கைகளை முன்வைப்பதாகும்.பிரதமராக வரவிரும்புவோர் எமது கோரிக்கையை பரிசீலிப்பதற்கு நாம் இடமளிக்க வேண்டும்.

அவரால் முடியுமா? முடியாதா? என்பதை தீர்மானிக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்ங வேண்டும்.நாம் பேசுவதால் அவரது பக்கம் சாய்ந்துவிட்டதாக யாரும் கருதவேண்டாம்.

இது ஒரு பேரம் பேசுதலாகும்.எமது மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுதலுக்கு ஒப்புதல் அளிப்பதைப் பொறுத்தே எமது ஆதரவை வழங்குவோம்.அது  வாக்கெடுப்பின்போதே தெரியவரும்.

தமிழத் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை நாம் இச்சந்தர்ப்பத்தை கவனமாக கருத்துச் செறிவோடு கையாண்டு வருகிறோம். சம்பந்தன் ஐயா முதலாவதாக கூறிய வசனம் “ நாங்கள் 70 வருடமாக இந்த நாட்டின் தலைவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் இனியும் ஏமாற்ற இடமளிக்க முடியாதென்பதே” தமிழ் மக்களுக்காக பாடுபடுகின்ற நாம் அறுதியும் இறுதியுமான அரசியல் தீர்வையே வேண்டியுள்ளோம். அதைவிட இந்த நாட்டின் பிரதமராக  வருவோர் இந்த நாடு சார்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு கொடுத்த வாக்கை கச்சிதமாக நிறைவேற்ற வேண்டும்.

இதைவிட எமக்கு சிறைக்கைதிகள் விடுதலை¸ நில மீட்பு¸ நட்ட ஈடு வழங்கல்¸ கல்முனை பிரதேச செயலகத்துக்க அந்தஸ்தை வழங்கல். புனர்வாழ்வளித்தல்¸ மீள் குடியேற்றம் என்பன வரிசைப்படுத்த வேண்டியவைகளாக இருந்துவருகின்றன. இவைகளை நிறைவேற்ற சம்மதிப்பவர்களுக்கே எங்களது தமித் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும். அதற்கும் காலவரையறை வழங்குவோம். காலவரையறையற்ற ஒப்புதலை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

நாம் தனிமனிதர்களையும் அவர்களது பதவியையும் கருத்திற் கொண்டு ஆதரவை வழங்கமர்டோம்.எங்களது கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்ற சித்தமாயிருப்பவருக்கே எமது ஆதரவை வழங்குவோம். இதில் எந்த மாற்றமுமில்லை. இதுபற்றி எமது மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும் என்றார்

Leave a comment