கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்

34117 37

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்க வில்லை எனக் கோரி கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலக வளாகத்தில் காலை பத்துமணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேசமே கண்மூடி தூங்குகின்றாயா ?? OMP  மீது எமக்கு  நம்பிக்கையில்லை, சர்வதேசமே எமது உறவுகளை மீட்டுத்தா ,  OMP யை எங்கள் மீது திணிக்காதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடனும் கோஷங்களுடனும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த போராட்டம் இடம்பெற்றது.

Leave a comment