தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வுக் கோரிக்கையை அடுத்து எழுந்துள்ள பிரச்சினையில் தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய இரண்டு தரப்பின் நியாயங்களையும் கருத்தில் கொண்டு பொது உடன்பாடு ஒன்றினை எட்ட வேண்டும்.
இதில் எவரும் அவசரப்பட்டு செயற்பட வேண்டாம் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று அரசின் கடன் பெருகைக்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
இன்று நாட்டில் தோட்டத்தொழிலாளர் பிரச்சினை ஒன்று தலைதூக்கியுள்ளது.
தேயிலை தோட்டத்தொழிலாளர் தமக்கான சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றே கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் கொடுப்பனவுகள் உள்ளடங்களாக 805 ரூபாய் வழங்கப்பட்டது.
இதில் அடிப்படை சம்பளம் 500 ரூபாவாக இருந்தது.அதனை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றே கூறுகின்றனர்.
எனினும் இப்போது தோட்டக் கம்பனிகள் இதனை மறுத்து 940 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
இதனை தொழிற்சங்கங்கள் எதிர்த்தும் வருகின்றது.இந்த நிலைமைக்கு தீர்வு ஒன்றினை காண வேண்டும்.இன்று தேயிலை உற்பத்தி வீழ்ச்சி கண்டு வருகின்றது.
தேயிலை தோட்டங்கள் பலவீனமடைந்து வருகின்றது. இதனை கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டு பக்க நியாயங்களையும் கருத்தில் கொண்டு ஒரு பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். மாறாக இந்த முரண்பாடுகளை வளரவிடக்கூடாது என தெரிவித்தார்

