ஆளுநர் சகிதம் அரசியல் கடைகள் திறக்கத்தொடங்கியுள்ளன!

212 0
வடமாகாணசபையின் நிர்வாக தலையீடு காரணமாக முடங்கிக்கிடந்த தரப்புக்கள் பலவும் ஆளுநர் சகிதம் தமது அரசியல் கடைகளை திறக்கத்தொடங்கியுள்ளன. நேற்றையதினம் டெலோ அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரும் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கனவுடன் நடமாடிவருகின்றவரான கணேஸ் வேலாயுதம் தனது சிவன் அறக்கட்டளையின் ஆலோசனைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயினை சந்தித்துள்ளனர்.

மேலும் கல்விக்குழுவினை சேர்ந்த உறுப்பினர்கள் நாளையதினம் வடமாகாண கல்விச் செயலாளரையும் கால்நடை விவசாயகுழு உறுப்பினர்கள் மாகாண கால்நடை செயலாளரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
நேற்றைய ஆளுனருடனான சந்திப்பில்
1.ஆங்கில மொழிக்கல்வியினை முன்னேற்றுதல்.
2. வன்னிப்பிரதேசத்தில் பாடசாலைகளில்; கணித விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைகளை பூர்த்தி செய்தல்.
3. பாடசாலைகளில் காலைப்பிரார்த்தனையின் போது மாணவர்களுக்கு யோகாசனப்பயிற்சிகள் வழங்குதல்.
4. அறநெறிப்பாடசாலைகளை வலுவூட்டல்.
5. வடமாகாணத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி கூடத்தினை அமைத்தல். முல்லைத்தீவு கீச்சன்குளம் பிரதேசம் மூலிகை வனம்.
6. சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சங்கானை பிரதேசத்தில் 33 பாடசாலைகளில் நடைபெற்றுவந்த மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை மீள ஆரம்பித்தல்.
7. பாடசாலைகளில் விளையாட்டுதுறையினை ஊக்குவித்தல்.
8. வடமாகாண வைத்தியசாலைகளில் 80 சதவீதமான தாதியர்கள் சிங்கள இனத்தை சோர்ந்தவர்கள். அதனால் நோயாளர்களுக்கும் தாதியருக்கும் இடையிலான தொடர்பாடலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்வது தொடர்பில்
9. வடமாகாணத்தில் நிலத்தடி நீரினை வியாபார நோக்கில் பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும்.
10. முன்பள்ளிகள் சரியான முறையில் செயற்படுவதில்லை. முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் போதியதாக காணப்படுவதில்லை.
11. வெளிநாட்டில் உள்ளவர்களின் காணிகள் சில பாவனையற்று புற்கள் பற்றைகள் நிறைந்து காணப்படுகிறது. பராமரிப்பு அற்ற இக்காணிகளை விவசாயத்திற்கு எம்முறையில் பயன்படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரசியல் நோக்கத்துடனான நகர்வுகளென தெரிவித்து வடமாகாண கல்வி அமைச்சினால் குறித்த அமைப்பின் பல நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருந்தது.

Leave a comment