ஒபாமா, ஹிலாரிக்கு வெடிகுண்டு பார்சல் – அதிபர் டிரம்ப், மெலானியா கண்டனம்

322 0

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு வெடிபொருள் பார்சல்கள் அனுப்பியதற்கு அதிபர் டிரம்ப், மெலானியா ஆகியோர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.
ஒபாமா, ஹிலாரிக்கு வெடிபொருள் பார்சல் அனுப்பப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, டிரம்ப் கூறுகையில், இது அருவருக்கத்தக்க செயல். அமெரிக்காவில் எந்த வகையிலும் பயங்கரவாதம் நுழைவதை அனுமதிக்க முடியாது. அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எனது அரசின் முக்கிய குறிக்கோள் என்றார்.
இதுகுறித்து மெலானியா டிரம்ப் கூறுகையில், இது கோழைத்தனமான செயல் என தெரிவித்தார்.

Leave a comment