ஐந்து நாளில் பெட்ரோல் விலை 1.46 ரூபாய் குறைவு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

201 0

கடந்த ஐந்து நாட்களில் பெட்ரோல் விலை 1.46 ரூபாய் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.
கடந்த 5-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை சற்றே குறைந்தாலும், மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கியது.தொடர்ந்து 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 18-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைய தொடங்கியது. அன்று முதல் கடந்த ஐந்து நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது.

கடந்த 5 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.46 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 82 காசுகளும் குறைந்துள்ளது.அதன்படி, இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகள் குறைந்து 84 ரூபாய் 64 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் குறைந்து 79 ரூபாய் 22 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களாக பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகத்தில் இருப்பது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a comment