பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஷவை விட பிரபல்யமான நபர் யார் உள்ளார்கள். 19 ஆவது அரசிலயமைப்பு சீர் திருத்தம் சர்வாதிகார ஆட்சியினை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கிலே கொண்டு வரப்பட்டது. ஆகவே இத்திருத்தத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் விதிவிலகக்கல்ல என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, பொதுஜன பெரமுனவிற்கோ தனித்து போட்டியிட்டு ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் மக்கள் பலம் கிடையாது. இந்நாட்டில் ஜனாதிபதி ஒருவரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியால் மாத்திரமே உருவாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

