மாத்தறை ரொட்டும்பவில் இனந்தெரியாதோர் துப்பாக்கிச் சூடு, 2 பேர் காயம்

4847 24

மாத்தறை, ரொட்டும்ப பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மாவரல மற்றும் கும்புருப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கறுப்பு நிற ஆடையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபர்களைத் தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment